millets vitamin powder
7 மாத குழந்தைகள் முதல் 70 வயது முதியவர்கள் வரை அனைவருமே இதை குடிக்கலாம். அவ்வளவு ஆரோக்கியமானது. தினமும் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் சாப்பிட அடம்பிடிக்கும் போது ஒரு தம்ளர் பாலை கொடுத்து அனுப்பும் அம்மாக்கள் அதற்கு பதிலாக இந்த ஹெல்த் மிக்ஸ் பவுடரை கலந்து கஞ்சியாக்கி குடித்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள். அவர்கள் சாப்பிட வேண்டிய அவசியமும் இருக்காது. காலை, மாலை என இரண்டு வேளையும் கலந்து கொடுக்கலாம்
பிள்ளைகள் கஞ்சியை விரும்பாவிட்டால் அந்த மாவை இலேசாக வறுத்து நெய் சேர்த்து உருண்டையாக்கி கொடுக்கலாம். அடை போன்று தட்டி கொடுக்கலாம். புட்டு போல் ஆவியில் வேகவைத்தும் கொடுக்கலாம். தேங்காய்ப்பூ, ஏலத்தூள், வெல்லம் சேர்த்து இனிப்பு அடையாகவும் தட்டி கொடுக்கலாம்.
பிள்ளைகளுக்கு கொடுக்கும் போது நாட்டுச்சர்க்கரை தேன் என ஏதாவது ஒன்றை இனிப்புக்கு பயன்படுத்தலாம். பெரியவர்கள், பெண்கள் குடிக்கும் போது அதிகம் இனிப்பு சேர்க்க வேண்டியதில்லை. நீரிழிவு நோயாளிகள் குடிக்கும் போது இனிப்புக்கு மாற்றாக சிறிதளவு உப்பு சேர்த்து குடிக்கலாம்.
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நிறைவாக இருப்பதால் பிள்ளைகள் புத்தி கூர்மையுடன் வளர்வார்கள். மந்தமாக இல்லாமல் சுறுசுறுப்பாக வளையவருவார்கள். உடல் சோர்வு இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். ஜீரணக்கோளாறு, வைட்டமின் குறைபாடு, மலச்சிக்கல், மந்தம், வயிற்று கோளாறு போன்ற பிரச்சனைகள் அண்டாமல் பிள்ளைகள் ஆரோக்கியமாகவே வளர்வார்கள். பிள்ளைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கு இதே நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தகக்து. சரி எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாமா? Vel foods சத்துமாவு 11/2 டீஸ்பூன் எடுத்து இரண்டு டம்ளர் பால் அல்லது தண்ணீர் கலக்கிக் கொண்டு அடுப்பில் வைத்து கிண்டவும் ஐந்து நிமிடம் கழித்து இறக்கி நாட்டு சக்கரை சேர்த்து பருகவும்.
